/* */

திருச்சி மாநகராட்சியில் நடந்த விழாவில் 65 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

திருச்சி மாநகராட்சியில் நடந்த விழாவில் 65 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சியில் நடந்த விழாவில் 65 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
X

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தோ்தல் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 22 -ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 120 வார்டு உறுப்பினா்கள், 14 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 216 வார்டு உறுப்பினா்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 401 பேருக்கு பதவி பிரமாணம் (பதவி ஏற்பு) செய்து வைக்கப்பட்டது.

இன்று காலை திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் காலை 10.30 மணியளவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. அதன் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 59 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 3 கவுன்சிலர்கள், 2 சுயேட்சை கவுன்சிலர்கள், ஒரு அ.ம.மு.க. கவுன்சிலர் என மொத்தம் 65 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.


இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையா் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர். அதேபோல் நகராட்சி ஆணையா்களும், பேரூராட்சி செயல் அலுவலா்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். 35 நொடி உறுதிமொழிகளுடன் இன்று பதவி ஏற்றனர். மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஒரு வேட்பாளரோடு 2 நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் வரக்கூடிய 2 நபர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வருகிற 4-ஆம் தேதி மேயா் மற்றும் துணை மேயா்களுக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது. அதேபோல் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது.

Updated On: 2 March 2022 11:30 AM GMT

Related News