/* */

பச்சமலையில் மீண்டும் சிறு தானியம் பயிரிடக் கோரி விதை வழங்கும் நிகழ்ச்சி

நச்சிலிப்பட்டி மற்றும் தென்புற நாட்டை சேர்ந்த விவசாயிகள் 25 பேருக்கு சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பச்சமலையில் மீண்டும் சிறு தானியம் பயிரிடக் கோரி விதை வழங்கும் நிகழ்ச்சி
X

மலைவாழ் மக்கள் மீண்டும் சிறுதானியங்களைப் பயிரிடக் கோரி விவசாயக் கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதி மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள பச்சைமலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு தானியப் பயிர்களை பயிர் செய்து வந்தனர். காலப்போக்கில் சிறு தானியங்களைப் பயிரிடாமல் மரவள்ளிக் கிழங்கு மற்றும் மா, பலா உள்ளிட்டவைகளை பயிர் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். அவர்களை மீண்டும் சிறு தானிய பயிர்களைப் பயிரிடுவது தொடர்பாக விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நச்சிலிப்பட்டி கிராமம், ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளின் வயல்களில் சிறுதானிய பயிர்களை பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கேழ்வரகு சாமை திணை மற்றும்வரகு போன்ற சிறுதானியங்களின் தரமான விதைகள் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டு உற்பத்திக்காக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலையம், விதை அறிவியல் உதவிப் பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் கலந்துகொண்டு விதை உற்பத்தி தொழில்நுட்பங்களையும், குமுளுர் வேளாண்மை பொறியியல் கல்லூரி முனைவர் ரஞ்சனி, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சிறு தானிய உற்பத்தியை பெருக்கும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.


Updated On: 28 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்