/* */

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ மாணவிகள் ரத்ததானம்

திருச்சி அருகே குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாணவ மாணவிகள் ரத்ததானம்
X

திருச்சி அருகே நடந்த ரத்ததான முகாமில் மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

திருச்சி அருகே உள்ள குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதி மாணவர்கள் இணைந்து, நடத்திய ரத்ததான முகாம் கல்லூரி விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வட்டார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் விக்னேஷ் தலைமை தாங்கினார்.

குழுமணி அரசு மருத்துவமனை டாக்டர் சுகந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் குழுமணி அரசு மருத்துவமனை பணியாளர்கள், கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிட்ட 30-பேர் ரத்த தானம் செய்தனர்.

இதில் ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்களை டாக்டர் சுகந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜமாணிக்கம், சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?