/* */

லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

HIGHLIGHTS

லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
X

லால்குடியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், லால்குடி தொகுதிக்கு தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி, வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டன. அதேபோல், லால்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், லால்குடியில் வணிக வளாகங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். குமுளூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி தொலைவில் உள்ளதால் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்ததால் அந்த கல்லூரி லால்குடி மைய பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும். லால்குடி இடையாற்றுமங்கலம், ஸ்ரீரங்கம், கிளிக்கூடு பகுதிகளை இணைத்து கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும். லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்றார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பழமையான கட்டிடம் இடிக்கப் பட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டப்படும். விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும் என்றார்.

இதையடுத்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு ஆகியோர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 4 ஆயிரம் மனுக்கள் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண் டியன், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சேர்மன் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, தாசில்தார் சித்ரா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், லால்குடி நகராட்சி கமிஷனர் குமார், புள்ளம்பாடி சேர்மன் ரசியா ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, ஆங்கரை ஊராட்சித்தலைவர் சண்முகநாதன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் வரவேற்றார். முடிவில் லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன் நன்றி கூறினார்.

Updated On: 21 Dec 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...