/* */

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு கருத்தரங்கு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு கருத்தரங்கு
X

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாடு கருத்தரங்கில் பங்கேற்றோர்.

உயர்கல்வி படித்த மாணவ, மாணவிகளுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இருக்கிற வெற்றிடத்தை நிரப்பவும், மாணவ-மாணவிகள் தொழில் துறை மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்து கொள்வதற்காகவும் அதன் மூலமாக வேலை வாய்ப்பினை பெற்று உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் கல்லூரிகளில் பல்வேறு வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுவது கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு இதுபோன்ற வழிகாட்டி கருத்தரங்குகள் உபயோகமாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில், இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து தென் தமிழகத்தில் முதல் முறையாக கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் ஒன்றிணையும் வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

"Mega Career Conclave" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயபிரகாசன் ஆன்லைன் மூலமாக நேரலையில் பங்கேற்று பேசினார்.

நிகழச்சிக்கு, வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு தலைமை வகித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என். சந்திரசேகர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி பிரிவின் தலைவர் தாமஸ் ஆண்டனி, தூத்துக்குடி பிரிவு கல்வி பொறுப்பாளர் சஞ்சய் குணசிங் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட நிகழ்வின் முதல் பகுதி தொழில் துறை நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் என்ற கருத்தை மையமாகக் கொண்டும், இரண்டாம் பகுதி தொழில்துறை நிறுவனங்களுக்கும் பட்டதாரி மாணவர்களுக்கும் இடையில் இருக்கிற வெற்றிடத்தை நிரப்ப என்ற மைய கருத்துருவை கொண்டும், மூன்றாம் பகுதி மாணவ மாணவியர் திறன்சார் பயிற்சிகளுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை குறித்தும் அமைந்திருந்தது.

கருத்தரங்கில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆசிய தேசிய பிரிவு தலைவர்கள் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கமான பதில்களை அளித்தனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி பிரிவு தலைவர் தாமஸ் ஆண்டனி மற்றும் நிர்வாகிகள், வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம், ராதிகா, ஸ்டீபன் பிச்சைமணி, திலீபன் குமார் மற்றும் வேலைவாய்ப்பு குழு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 31 Oct 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!