/* */

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி…அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்..

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி…அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்..
X

செஸ் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாதம்தோறும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இதேபோல, தமிழ்நாடு சதுரங்க கழகத்துடன் இணைந்து அவ்வவப்போது மாநில அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடியில் நடத்தப்படும். அதன்படி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. இதில், மதுரை, சென்னை, விருதுநகர், தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, ஈரோடு, கடலூர், சிவகங்கை, தூத்துக்குடி என தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300 செஸ் போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி அன்டனி அதிஷ்டராஜ் போட்டியை துவக்கி வைத்தார். விழாவில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முதன்மை மேலாளர் நீதிராஜன் கலந்து கொண்டு போட்டியாளர்களை வாழ்த்தி பேசினார்.

போட்டிகள் 6 சுற்றுகளாக நடைபெற்றது. 9 வயதுக்குள்பட்டோர் மாணவர் பிரிவில் தனீஷ், மாணவிகள் பிரிவில் தீப்தஸ்ரீ ரவி கணேஷ், 11 வயதுக்குள்பட்டோர் மாணவர் பிரிவில் பிரித்விராஜ், மாணவிகள் பிரிவில் சன்மதி ஸ்ரீ, 13 வயதுக்குள்பட்டோர் மாணவர்கள் பிரிவில் யஷ்வந்த், மாணவிகள் பிரிவில் தவ்பிகா, 15 வயதுக்குள்பட்டோர் மாணவர் பிரிவில் ஜெய்சங்கர் சுப்பிரமணியன், மாணவிகள் பிரிவில் ஸ்ரீ தீபிகா தேவி ஆகியோரும், பொதுப் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டேன்லி சாம்சனும் முதல் பரிசை பெற்றனர்.

தொடர்ந்து காமராஜர் கல்வி அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுற்கு, தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ் தலைமை வகித்தார். காமராஜ் கல்லூரி பொருளாளர் முத்துசெல்வம் பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

காமராஜ் கல்லூரி செயலர் சோமு முன்னிலை வகித்தார். விளையாட்டு அறிக்கையை சர்வதேச நடுவர் கணேஷ்பாபு வாசித்தார். முதன்மை விருந்தினராக தமிழ்நாடு சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மாணவர், மாணவி என 8 பேருக்கு 8 சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பு பரிசு பெற்ற 120 பேருக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. பொதுபிரிவில் ரொக்கப் பரிசாக ரூ.12,000 வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மாவட்ட சதுரங்கக் கழகத் துணைத்தலைவர் ரெபின்கார்சியஸ் மற்றும் மாவட்ட சதுரங்கக் கழக உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் காமராஜ் கல்லூரி பேராசிரியர்கள், மாவட்ட சதுரங்க கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட சதுரங்க கழக செயலாலர் கற்பகவல்லி நன்றி கூறினார்.

Updated On: 20 Nov 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்