/* */

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம்

Central Cooperative Bank -தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது பேரவைக் கூட்டம் வங்கியின் தலைவர் இரா. சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம்
X

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேரவைக் கூட்டத்தில் பேசுகிறார் வங்கியின் தலைவர் இரா. சுதாகர்.

Central Cooperative Bank -தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25 ஆவது பொது பேரவைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வங்கியின் தலைவர் இரா. சுதாகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி, வங்கியின் மேலாண்மை இயக்குநர் சிவகாமி, வங்கியின் துணைத் தலைவர் க. கணேஷ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஆர்.கே. சுரேஷ் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், வங்கியின் தலைவர் இரா. சுதாகர் பேசிய விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2011 ஆண்டு முதல் தொடர்ந்து நிகர லாபத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் 4 ஆவது பேரவைக் கூட்டமாகும்.

புதிதாக நிர்வாகக் குழு பொறுப்பேற்கும் போது வங்கியின் பங்குத் தொகை ரூ. 18.70 கோடியாக இருந்தது. தற்போது ரூ .4.81 கோடி அதிகரித்து ரூ. 22.87 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை ரூ.490 கோடியாக இருந்தது. தற்போது ரூ. 255 கோடி அதிகரித்து ரூ. 745 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் கடன் நிலுவை ரூ. 483 கோடியில் இருந்து தற்போது ரூ. 333 கோடி அதிகரித்து ரூ. 816 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக புதிதாக நிர்வாகக்குழு பொறுப்பேற்ற பின்னர் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகை ரூ. 255 கோடியும், கடன் நிலுவை ரூ. 333 கோடியும் உயர்ந்துள்ளது.

2020-21 நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ. 6. 66 கோடி ஆகும். அதே போல் 2021-22 நிதியாண்டில் ரூ. 2.63 கோடி நிகர லாபம் லாபம் ஈட்டியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர் சங்கங்களுக்கு 5 சதவீம் பங்கு ஈவு தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பங்கு ஈவு தொகையாக ரூ. 1.02 கோடி உறுப்பினர் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது வங்கி ஈட்டியுள்ள நிகர லாபத்தில் 39.25 சதவீதம் ஆகும்.

நடப்பு நிதியாண்டில் நாகலாபுரம் என்ற ஊரில் வங்கியின் 27 ஆவது கிளை துவங்கப்பட உள்ளது. அதே போல் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்தில் புதிதாக 2 ஏ.டி.எம். மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம் வானரமுட்டி கிராமத்தில் வங்கிக்கு சொந்தமாக இடம் வாங்கப்பட்டு, அதில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் பயன்பெற மொபைல் வேன் மூலம் நடமாடும் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கே.சி.சி-ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்குரிய வசதி பெற முடியும் என்ற நிலை ஏற்படுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகை சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தில் வங்கியின் பொது மேலாளர் வெ. சுந்தரேஷ்வரன் வரவேற்றுப் பேசினார். வங்கியின் மேலாளர் சு. பழனியாண்டி ஆண்டறிக்கை வாசித்தார். வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் ந. சக்திவேல் நன்றி கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!