/* */

பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்திடும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
X

வாட்ஸ்அப் எண் விவரம்.

நாட்டில் பெண் குழந்தைகள் மீதான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வந்த நிலையில், அவற்றை தடுக்கும் வகையில் கடந்த 2018 ஆண்டு போக்சோ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி, குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்போருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு, துன்புறுத்தல் ஈடுபடுவோர் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். இந்த நிலையில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க வசதியாக வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் கூறியதாவது:

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அமைச்சர் கீதாஜீவன் அறிவுரையின்பேரில், சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண் குழந்தைகள், மாணவியர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் வாட்ஸ்அப் எண் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை 24 மணி நேரமும் 6374810811 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு பதிவு செய்யலாம். புகார் தொடர்பாள விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கன், குழந்தை திருமணம் தடுத்தல், பள்ளி கல்வியில் இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என அனைத்து குற்ற நிகழ்வுகளையும் இந்த எண்ணில் பதிந்து உடனடியாக தீர்வு காணலாம். குழந்தைகள் பாதுகாப்பு என்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை உறுதி செய்வோம் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2023 2:47 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!