/* */

போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: தூத்துக்குடி எஸ்.பி. வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: தூத்துக்குடி எஸ்.பி. வேண்டுகோள்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போதைப் பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துணை கண்காணிப்பாளரது செல்போன் மற்றும் வாட்ஸ்அப்புக்கு 98409 23723 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்;தில் விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், சுநஉவகைநைன ளிசைவை யனெ ளிரசழைரள ளிசைவை போன்ற கலப்பட மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்புவின் செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்ணுக்கு (9840923723) தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 16 May 2023 6:17 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி