/* */

கப்பல் மோதி மாயமான மீனவரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

கப்பல் மோதி மாயமான மீனவரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் சரக்கு கப்பல் மோதி மாயமான மீனவரை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடந்த 11ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி பேராபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற மீனவரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமானார்கள். இந்த மீனவர்களை தேடும் பணியை இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடலில் மாயமான மணப்பாட்டை சேர்ந்த டென்சன் என்ற மீனவரை மீட்பதற்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்து டென்சனின் மனைவி ராணி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Updated On: 16 April 2021 6:00 AM GMT

Related News