/* */

தூத்துக்குடி கோயில்களில் 8ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம்,கோவில்பட்டி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி  கோயில்களில் 8ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
X

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்

தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், கோவில்பட்டி அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், ஞாயிறு (01.08.2021), ஆடிக்கிருத்திகை (02.08.2021), ஆடி 18ம் நாள் (03.08.2021), ஆடி அமாவாசை (08.08.2021) விசேஷ நாட்களை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்பொருட்டு 01.08.2021, 02.08.2021, 03.08.2021 மற்றும் 08.08.2021 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் புதன் (04.08.2021) முதல் ஞாயிறு (08.08.2021) ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருவதால் மேற்கூறிய 04.08.2021 முதல் 08.08.2021 முடிய திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மேலும் கோவில்பட்டி வட்டம் கோவில்பட்டி அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஆடிப்பூரம் (10.08.2021), ஆடி கடைசி வெள்ளிக்கிழமை(13.08.2021) ஆகிய நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருவதால் மேற்கூறிய 10.08.2021, 13.08.2021 ஆகிய நாட்களில் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மேற்படி நாட்களில் திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் பொதுமக்கள் மேற்கூறிய திருக்கோயில்களில் அதிக அளவில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாவுவதைத் தடுக்கும் பொருட்டு மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் 04.08.2021 முதல் 08.08.2021 முடியவுள்ள நாட்களில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Aug 2021 1:01 PM GMT

Related News