/* */

தூத்துக்குடியில் முககவசம் அணியாத 568 பேருக்கு அதிரடி அபராதம்

தூத்துக்குடியில்  முககவசம் அணியாத 568 பேருக்கு அதிரடி அபராதம்
X

கோப்பு படம்

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 226 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 42 பேர், திருச்செந்தூர் 35 பேர், ஸ்ரீவைகுண்டம் 30 பேர், மணியாச்சி 73 பேர், கோவில்பட்டி 86 பேர், விளாத்திகுளம் 55 பேர் மற்றும் சாத்தான்குளத்தில் 21 பேர் என மொத்தம் 568 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,13,600 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 7 பேர், கோவில்பட்டி 5 பேர், விளாத்திகுளம் 3 பேர் மற்றும் சாத்தான்குளத்தில் 2பேர் என மொத்தம் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.8,500 பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 May 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...