/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.21 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.21 கோடி பறிமுதல்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.1.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படை மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் மட்டும் 15 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணம் இன்றி கொண்டு வரக்கூடிய பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 101 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 642 மதிப்பிலான பொருட்கள், ரூ.5 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 750 மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ.99 ஆயிரத்து 310 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?