/* */

கொரோனா பாதிப்பிலும் துாத்துக்குடி துறைமுகம் - சாதனை.

31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது

HIGHLIGHTS

கொரோனா பாதிப்பிலும் துாத்துக்குடி துறைமுகம் - சாதனை.
X

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு 2020-21-ல் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் விழுக்காடு குறைவாகும்.

இறக்குமதியை பொருத்தவரையில் 22.53 மில்லியன் டன்களும் (70.86%), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.18 மில்லியன் டன்களும் (28.90%) சதவிகிதமும், சரக்குபரிமாற்றம் 0.08 மில்லியன் டன் (0.24%) சதவிகிதமும் கையாண்டுள்ளது.

மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2020-21 நிதியாண்டில் 7.62 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 டி.இ.யுக்களை ஒப்பிடுகையில் 5.22 % குறைவாகும்.

கரோனா தொற்று உலமெங்கும் விநியோக சங்கலி, கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களில் ஏற்படுத்திய நெருக்கத்தினால் 2020-21 நிதியாண்டில் துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் 2019-20 நிதியாண்டை விட குறைவாக இருந்தாலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மேம்பட்ட சரக்கு கையாளும் திறனின் மூலம் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2020-21 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 549.51 கோடி (2019-20 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 582.90 கோடி) ஆகும். 2020-21 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 322.63 கோடி (2019-20 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 328.71 கோடி) ஆகும். 2020-21 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 113.72 கோடி (2019-20 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 135.23 கோடி) ஆகும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூபாய் 64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி துவக்கப்படும் தருவாயில் உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 49மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் (தற்போது ௪௮ மீட்டர் நீளம் மற்றும் 310 மீட்டர் அகலம்) கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூபாய் 15.24 கோடி செலவில் துறைமுகம் செயல்படுத்தப்பட உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களின் போக்குவரத்தின் அதிகரிப்பு அவசியத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது சரக்குபெட்டக முனையம் பொது தனியார் கூட்டமைப்பின்கீழ் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தி;ல் 100 சரக்குபெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூபாய் 47 கோடி செலவில் நிறுவும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

மற்றும் பாதுகாப்பு இயக்குநர் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி எரிவாயு மற்றும் எரிப்பொருள் தயாரிப்புகளை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்யும் வண்ணம் தீயணைப்பான் அமைப்பு ரூபாய் 17.50 கோடி திட்டமதீப்பில் செயல்படுத்த உள்ளது.

அனைத்து பெருந்துறைமுகங்களுக்கும் முன் மாதிரியாக திகழும் வண்ணம் பசுமை ஆற்றல் திட்டத்தை செயல்படுத்தி இந்திய பெருந்துறைமுகங்களில் முதல் பசுமை துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விரைவில் திகழ உள்ளது.

இதன்படி 5 மெகாவாட் தரை சார்ந்த சூரியமின் சக்தி ஆலை ரூபாய் 19.81 கோடி செலவில் நிறுவ உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை சூரியமின்சக்தி ஆலைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்றொரு 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை எரிசக்தி திட்டமானது விரைவில் நிறுவப்பட உள்ளது.

மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடல் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. துறைமுகத்தில் தொழிற்சாலைகள் அமைய பெறுவதற்கு 2000 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக 334.30 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளன.

உலகளவில் தாக்கப்பட்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பினால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்திய குடிமக்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசு 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின்கீழ் 'சமுத்திர சேது' பணியின் மூலம் இந்திய கடற்ப்படை கப்பல்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகமாக மார்க்கமாக 4 முறை தாயகம் அழைத்து வந்ததுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்: தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பினால் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

துறைமுக ஊழியர்கள் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதி மக்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறிய பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து துறைமுக செயல்பாடுகள் நடைபெறும் இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக செயல்பாடுகளின் போது தங்களை பாதுகாத்து கொள்ள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPநு மவை) வழங்கப்பட்டு வருகிறது. கையேடுகள், பதாகைகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கணிணி மூலமாக கரோனா பெருந்தொற்று விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா அறிகுறியுடன் தென்படுவோர்களை தனிமைப்படுத்துவதற்குகான வசதியினை துறைமுக கட்டிடங்களில் ரூபாய் 20 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. பெருநிறுவன சமுதாயப் பொறுப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, கரோனா அறிகுறியுடன் தென்படுவோர்களை தனிமைப்படுத்தவதற்கு கூடுதலாக 54 படுக்கை வசதிகளுடன் கூடிய 19 வார்டுகள்; ரூபாய் 25 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், கோவிட்-19 தொற்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டுருக்கும் இத்தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

Updated On: 14 May 2021 1:55 PM GMT

Related News