/* */

திருவாரூரில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது.

HIGHLIGHTS

திருவாரூரில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி முகாம்
X

திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறும்போது

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள், நிலையான தடுப்பூசி முகாம்கள், மருத்துவமனைகள், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்பொழுது குறைந்திருந்தாலும் நாம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். இன்றைய தினம் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்கள் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி;; அவர்களது பள்ளிகளிலேயே செலுத்த திட்டமிடப்பட்டு தடுப்பூசி முகாம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அனைத்து காலகட்டத்திலும் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஹேமசந்காந்தி, கொரடாச்சேரி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினரும், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினருமான பிரகாஷ், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைசெல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 1:13 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்