/* */

ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்

இதுவரை 11 லாரிகள் 650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்

HIGHLIGHTS

ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்
X

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் எடைமேடை பகுதியில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது வியாபாரிகளின் நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படுகிறதா என லாரி ஓட்டுனர்களிடம் ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லும்போது புதிய படிவம் வழங்கப்பட்டுள்ளதை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கரன் தெரிவித்ததாவது.: நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குழு அமைத்து, ஒழுங்கு முறைப்படுத்தி படிவம் தயாரித்து, நெல் கொள்முதல் செய்யும் போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது லாரி உரிமையாளர்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிவுறுத்தி இருக்கிறோம். இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் ஆய்வாளர்கள் லாரி ஓனர்களிடமும், கொள்முதல் செய்பவர்களிடமும் ஏற்கெனவே இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நெல் மூட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப்படும். இதுவரை 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 650 டன் நெல் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை கொள்முதல் செய்து மாவட்டம் விட்டு மாவட்டம் எடுத்து செல்லும்போது இந்த ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு முழு காரணம் விவசாயிகள் பாதிக்கப் படக்கூடாது என்பது தான். விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிக்கொண்டு அதை தவறாக பயன்படுத்த கூடாது என்பதன் காரணமாகத்தான் இந்த சோதனை செய்யப்படுகிறது. விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் தவறு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆவணங்கள் கேட்கப்படுகிறது. இதுதான் இதன் நோக்கம் என்றார்

இந்த ஆய்வின் போது குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி டிஎஸ்பி சுதர்சன்,நாகப்பட்டினம் மாவட்ட ஆய்வாளர் கல்பனா, திருவாரூர் தலைமை காவலர் செந்தில்மற்றும் திருவாரூர் சிவில் சப்ளை சிறப்பு வருவாய் அலுவலர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Feb 2022 2:39 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!