/* */

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரிலிருந்து விவசாயிகள் பயணம்

காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி. ஆர். பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருவாரூரிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திருவாரூரிலிருந்து விவசாயிகள் பயணம்
X

மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் திருவாரூரில் இருந்து புறப்பட்டனர்.

கர்நாடகா மாநிலத்தில் தமிழகத்தின் குறுக்கே மேகதாது அணையை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.இதனை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை மேகதாது அணை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று திருவாரூர். கீழவீதியிலிருந்து பி. ஆர் பாண்டியன் தலைமையில் 100க்கும மேற்பட்டோர் பேரணியாக பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் வரை சென்றனர் .தொடர்ச்சியாக வாகனங்கள் மூலம் முற்றுகை போராட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பி. ஆர். பாண்டியன் கூறும்போது

தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு அரசியலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கி தமிழகத்தை வறட்சி பிரதேசமாக மாற்றி காட்ட அரசியல் லாப நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட பேரணி நடத்துவதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மேகதாது அணை பகுதியில் முற்றுகை யிடுவதற்க்காக புறப்பட்டு இருக்கின்றோம்.

நீதி சொன்ன திருவாரூர் மனுநீதி சோழன் மண்ணிலிலிருந்து புறப்படும் இந்த வீரம் கொண்ட பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுப்பதற்காக புறப்பட்டு உள்ளது. மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவதற்காக மோடி அரசு தொட்டியும் ஆட்டி தொடையை கிள்ளுகிற பழமொழிக்கேற்ப கர்நாடகாவில் அணை கட்ட அனுமதியும் கொடுத்து நிதி திட்ட அறிக்கை தயார் செய்ய வற்புறுத்தி இருக்கிறது. அதனை திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு காங்கிரஸ் கட்சி பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும் ,காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

Updated On: 18 Jan 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு