/* */

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசால் தீபாவளி பண்டிகையின்போது 30 நாட்களுக்குள் பட்டாசு கடை வைப்பதற்கான தற்காலிக உரிமங்களை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இ சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில் கடை அமைக்கப்பட உள்ள இடத்தின் உரிமம் குறித்த ஆவணங்கள், ரூபாய் 500 கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் 22.10.21 அன்று கொடுக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் 27.10 .21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் மீது காவல்துறை வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் எரிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008 இன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படும். எனவே தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் 27.10.21க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 18 Oct 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!