/* */

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

திருவாரூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
X

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறை இணைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திருவாரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நான்கு பிரிவுகளாக நடத்தியது.

இதில் கை,கால் ஊனமுற்றோருக்கான ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், கூடைப்பந்து போட்டி பார்வையற்றோருக்கான நின்ற நிலையில் தாண்டுதல், ஓட்டப் போட்டிகள், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், காது கேளாதோருக்கான ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 96 மாணவர்கள் 50 மாணவிகள் உள்ளிட்ட 146 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடக்கும் போட்டிகளுக்கு திருவாரூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் ராஜ் கருணாநிதி, மண்டல உதவி ஆளுநர் ராமதுரை, மாற்றுத்திறனாளி பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...