/* */

திருத்துறைப்பூண்டியில் உடல் நலம் காக்க சைக்கிள் ஓட்டுதல் பற்றிய பேரணி

திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் உடல் நலம் காக்க சைக்கிள் ஓட்டுதல் பற்றிய பேரணி
X

திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் தன்னார்வ அமைப்பு மற்றும் காவல் துறை சார்பாக சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.மன்னார்குடி சாலையில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார் .

தினந்தோறும் சைக்கிள் ஓட்டுவதால் இதய அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆயுள் காலம் 70 வயது வரை நீட்டிக்க வாய்ப்பு, அதுமட்டுமல்லாமல் உடல் பருமன் சீராக வைக்க உதவுகிறது. முக்கியமாக கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்பதை விளக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சைக்கிள் பேரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாகை சாலை வழியாக பட்டுக்கோட்டை சாலை வரை சென்று முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வ அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Feb 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்