/* */

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேனி போலீசார் நிம்மதி

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்குள் நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேனி போலீசார் நிம்மதி
X

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள் தோறும் நடைபெற்று வந்த இந்த குறைதீர்க்குள் நாள் கூட்டங்களில் சிலர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து தீ வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் நாடகம் விடுப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். வாரந்தோறும் குறைந்தபட்சம் 3 பேராவது வந்து இது போல் நாடகம் ஆடுகின்றனர். இவர்களை கண்காணித்து தடுக்காவிட்டால், ஏதாவது ஒரு விபரீதம் ஆகி விடும் என்ற அச்சமும் போலீஸ் மத்தியில் உள்ளது.

இதனால் வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு மிகுந்த கண்காணிப்புடன் ஒவ்வொரு நபரையும் சோதனை செய்து அனுப்பி வைத்து வந்தனர். இப்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஒரு பெரிய பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Jan 2022 3:59 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு