/* */

மிகவும் வருத்தப்பட வேண்டியது வரும்: பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

இன்று முதல் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என தேனி கலெக்டர் முரளிதன் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

மிகவும் வருத்தப்பட வேண்டியது வரும்: பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
X

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்ற கலெக்டரிடம் மின் இணைப்பு வேண்டி முறையிட்ட மூதாட்டி வீராயி.

ஒரு வாரமாக தான் தனியாக இரவு ரோந்து சென்ற போது, தேனி மாவட்ட மக்களின் அலட்சியப்போக்கினை நேரடியாக கண்டேன். இன்று முதல் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தேனி கலெக்டர் முரளிதன் கடும் கோபத்துடன் எச்சரித்தார்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இன்று கலெக்டர் முரளிதரன் அதிகாரிகள் குழுவுடன் கம்பம் சென்றிருந்தார். அங்கு சுருளிப்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வீராயி அம்மாள் என்பவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் தான் இருட்டில் வசிப்பதாக கலெக்டரிடம் முறையிட்டா். அவரது வீட்டிற்குள் சென்று பார்த்த கலெக்டர் மூதாட்டியிடம் சிறிது நேரம் பேசி அவரது வறுமையினை புரிந்து கொண்டார். தனது சொந்த செலவில் மூதாட்டிக்கு சேலை, போர்வைகள் வாங்கிக் கொடுத்தார். பின்னர் கம்பத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசியதாவது: கடந்த ஒரு வாரமாக நான் மட்டும் தனியாக தேனி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தினமும் இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை தனியாக ரோந்து சென்று மக்களை கவனித்து வருகிறேன். தேனி பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட், முக்கிய ரோடு சந்திப்புகளில் நின்றும் மக்களை கவனித்தேன்.

கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள், பொருள் வாங்க வருபவர்கள், சாலைகளில் பயணிப்பவர்கள் என்று அத்தனை பேரையும் கவனித்தேன். யாரும் முககவசம் அணியவில்லை. கொரோனா நம்மை விட்டு போய் விட்டது என்று மிகுந்த அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை. முககவசம் அணிவதில்லை, கைகளை சானிடைசரால் சுத்தம் செய்வதில்லை. இப்படியே இருந்தால் கொரோனா மீண்டும் வந்து நம்மை உலுக்கி எடுத்து விடும். மக்களின் அலட்சிய போக்கினை பார்த்த போது எனக்கு கடும் கோபமும் ஆத்திரமும் வந்தது. நான் தனியாக ரோந்து சென்றதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மக்களை எச்சரிக்கிறேன். இன்று முதல் யாராவது கொரோனா விதிமுறைகளை மீறினால் அவர்கள் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். போலீஸ், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரம், மருத்துவம் என அத்தனை துறைகளுக்கும் அதிகாரம் அளித்துள்ளேன். கொரோனா விதிகளை பின்பற்றாதவர்கள் இனிமேல் மிகவும் வருத்தப்பட வேண்டியது வரும் என கடுமையாக பேசினா். கலெக்டரின் கோபத்தை கண்டு பொதுமக்கள் மட்டுமல்ல, அதிகாரிகளுமே மிரண்டு போயினர்.

Updated On: 6 Aug 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்