/* */

கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்! சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Kumbakarai Falls Today News-கும்பக்கரை அருவியில் வெள்ளம் வரும்போதெல்லாம் கரைப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். சில சமயங்களில் வெள்ளம் எதிர்பாராத விதமாக திடீரென்று வரும். அப்போதெல்லாம் வனத்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்போதும் அதுபோலத்தான் நடந்துள்ளது.

HIGHLIGHTS

Kumbakarai Falls Today News
X

Kumbakarai Falls Today News

Kumbakarai Falls Today News-கும்பக்கரை அருவி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு வனத்துறை அதிகாரிகள் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் சில மணி நேரங்கள் அங்கு பரபரப்பாக சென்றது.

தேனி மாவட்டம் பெரிய குளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பரவலாக மழைப் பொழிவு இருக்கும்போது கும்பக்கரை அருவியில் அதிக நீர் வரத்து இருக்கும். திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடும். மழைக்காலங்களில் இது நடக்கும் இயல்பான விசயம் என்பதால் அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு காட்சியளிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், அப்படி ஒரு காட்டாற்று வெள்ளம் திடீரென்று வர கும்பக்கரை பகுதிக்கு மகிழ்ச்சியுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கிட்டத்தட்ட 30 பேர் வரை இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய வனத்துறையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து வெள்ளம் இல்லாத பகுதிக்கு அழைத்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் யாரும் நிற்க வேண்டாம் எனவும் அருவியில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வந்த வெள்ளத்தால் சில சுற்றுலா பயணிகள் உண்மையிலேயே பதைபதைப்பில் இருந்தனர்.

பொதுவாகவே சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. பொதுமக்களும் விவசாயிகளும் இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் இதுபோன இடங்களுக்கு செல்வதும் அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்புவதும் தொடர் வாடிக்கையாக நடந்து வருகிறது.

கும்பக்கரை அருவியில் வெள்ளம் வரும்போதெல்லாம் கரைப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். சில சமயங்களில் வெள்ளம் எதிர்பாராத விதமாக திடீரென்று வரும். அப்போதெல்லாம் வனத்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்போதும் அதுபோலத்தான் நடந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...