/* */

உலகமே ருசிக்கும் சாக்லெட்....எப்படி உருவானது தெரியுமா?

Chocolate History in Tamil-நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்தாலும் அதில் முக்கிய இடம் வகிப்பது சாக்லேட் தான்..

HIGHLIGHTS

Chocolate History in Tamil
X

Chocolate History in Tamil

Chocolate History in Tamil-நமக்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது சாக்லேட். சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்டுகள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.

இப்படி நம்முடைய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் சாக்லேட்டை கொண்டாடுவதற்கும் தனியாக ஒரு நாள் கடை பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ஆம் தேதி உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு சாக்லேட் பரவ ஆரம்பித்த நாளை அடிப்படையாகக் கொண்டுதான் சாக்லேட் தினம் ஜூலை 7-ம் தேதி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தெளிவான விளக்கங்கள் என்று எதுவும் கிடையாது. சாக்லேட் உருவான வரலாறு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தற்போது மூலை முடுக்குகளில் எல்லாம் மிக எளிதாக கிடைக்கக்கூடிய சாக்லேட் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மெசோ அமெரிக்காவில் மட்டுமே கிடைத்தது. தற்போதைய மத்திய தென்னமெரிக்கா பகுதியை உள்ளடக்கிய பகுதிகள் அந்த காலத்தில் மெசோ அமெரிக்கா என அழைக்கப்பட்டது. ஆனால் நாம் தற்போது ருசிக்கும் சாக்லேட்டை அவர்கள் அப்போது ருசிக்கவில்லை. பண்டைய கால மக்கள் சாக்லேட்டை ஒரு பானமாக தான் அருந்தி வந்தனர்.

கொக்கோ மரங்களிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறையை அவர்கள் தெரிந்து கொண்ட பிறகு, அதை வைத்து விதவிதமான பானங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். கோக்கோ புளியுடன் காய்ந்த மிளகாய் உள்ளிட்டவற்றை கலந்து கசப்பான காரசாரமான பானமாக இதை அருந்தி வந்தனர். அப்போது சாக்லேட் என்பது கசப்பான பானமாகவே இருந்தது. அது மட்டுமல்லாமல் இறைவனால் மனிதனுக்கு வரப் பிரசாதமாக அனுப்பப்பட்ட உணவு இது என்று மெசோ அமெரிக்கா மக்கள் நம்பினர்.

அரச குடும்பங்களின் விருதுகளில் தவிர்க்க முடியாத பானமாக மாறியது சாக்லேட். போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சாக்லேட் பானங்களை கொடுத்து கௌரவிக்கும் வகையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருந்தது. அதனைப் போலவே மத சடங்குகளிலும் சாக்லேட் பானங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். 1519 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கொக்கோ கொட்டை மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த பிறகு, அதை பயன்படுத்தும் முறைகளும் படிப்படியாக மாற ஆரம்பித்தது.

அதனுடைய கசப்பு தன்மைகளில் மருத்துவ குணங்கள் இருப்பதால் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு அதை கொடுக்க ஆரம்பித்தனர். சாக்லேட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரேடோனின் என்ற வேதி பொருளை சுரக்க செய்கிறது. இப்படி கசப்பான பானமாக இருந்த வந்த சாக்லேட்டை சிறிது தேன் கலந்து சுவைத்தபோது அதன் சுவை சூப்பராக மாறியதை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு சாக்லேட்டுடன் இனிப்பு சுவையை சேர்க்க ஆரம்பித்தனர். அதன் தேவை அதிகரித்த பிறகு மோசமான சில சம்பவங்களும் நடக்க ஆரம்பித்தது. கொக்கோ மரங்களை உற்பத்தி செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இதனை அதிக அளவில் பயிரிடுவதற்காக கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக பயன்படுத்த ஆரம்பித்தனர். 1828 ஆம் ஆண்டு தான் திடமான சாக்லேட்டை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர்.

நாம் தற்போது உண்ணும் சாக்லேட்டுகளுக்கு அதுதான் அடிப்படையாக அமைந்தது. அதனைப் போலவே ஸ்விஸ் மக்கள் 1875 ஆம் ஆண்டுகளில் சாக்லேட்டுடன் பால் பவுடர் சேர்த்து மில்க் சாக்லேட் கண்டுபிடித்தனர். படிப்படியாக மேற்கு ஆப்பிரிக்கா வரை சென்ற கொக்கோ, தற்போது முக்கிய உற்பத்தி தொழிலாக மாறியது. உலக அளவில் இதனை அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவிரி கோஸ்ட் என்ற பகுதி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

ஆப்பிரிக்காவுக்கு கொக்கோ சென்ற பிறகு பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தது. இதனை அதிக அளவு உற்பத்தி செய்வதில் போட்டி ஏற்பட்ட நிலையில், ஆப்பிரிக்காவில் குழந்தை தொழிலாளர் முறையும் அதிகரித்தது. சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்பட்டு கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் இன்று ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய சாக்லேட்டின் வரலாறு இப்படிப்பட்ட கசப்பான சில விஷயங்களும் இருக்க தான் செய்கிறது.

சாக்லேட் சாப்பிடுவதால் பல நன்மைகளும் உள்ளன. டார்க் சாக்லேட் ஊட்டச்சத்து மிகுந்தவை. ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்று சொல்லப்படும் உடலுக்குத் தேவையானவை இதில் மிகுந்து காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகரித்து மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதயக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க உதவுவதோடு உடல் சருமத்தை பாதுகாக்கிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 5:25 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  7. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  10. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?