/* */

இந்தியா மீதான சீனாவின் புதிய புலம்பல்!!!

India-China News Latest -எங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியா துடிக்கிறது என்று சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் சொல்லி இருக்கிறார்

HIGHLIGHTS

இந்தியா மீதான  சீனாவின் புதிய புலம்பல்!!!
X

பைல் படம்

India-China News Latest -எங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியா துடிக்கிறது என்று சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் சொல்லி இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என்று விரிவாக பார்த்துவிட்டு இந்த தலைப்புக்கு வருவோம் இந்தியா யாருக்கும் தெரியாமல் தஜிகிஸ்தானில் இரண்டு இடங்களில் கடந்த ஐந்து வருடங்களாக ராணுவத் தளங்களை அமைத்து வந்துள்ளது. இத்தனை நாள் இதைப்பற்றி வெளியிடாமல் தற்போது வெளியிடக் காரணம் என்ன அதற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது.

இதற்கும் கடைசியில் வருவோம்.. சரி விஷயத்திற்கு வருவோம்...

கடந்த வருடம் இந்திய சீன பிரச்னைக்கு தீர்வுகாணும் பொருட்டு பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் படைகளை அதாவது 72 நாள் நீயா? நானா? என்று நேர் எதிரே நின்ற படைகள் வாபஸ் வாங்கப்பட்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சீனா வாபஸ் வாங்குவதுபோல் நாடகம் ஆடிவிட்டு சற்று தொலைவிலேயே படைகளை வைத்திருந்தது. அதாவது குளிர் தாங்க முடியாத காரணத்தால் இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த இந்தியப் படைகளும் வாபஸ் வாங்குவது போல் சற்று தள்ளியே நிறுத்தி வைக்கப்பட்டது.

திடீரென ஒருநாள் சீன பாகிஸ்தான் படைகள் திபெத் பகுதிக்கு அருகில் போர்ப் பயிற்சி எடுத்தன. இந்தியா தனது எல்லையில் படைகளை குவிக்கத் துவங்கியது. சீனா அவ்வப்போது தனது J 11 போர் விமானத்தையும் JF 17 ரக போர் விமானங்களையும் நமது எல்லைக்கு அருகே வந்து போவது போல் பாவனைக்காட்டி இந்தியாவுக்கு பயத்தை ஊட்டுவதாக நினைத்து செயல்பட்டது. உடனே இந்தியா, நமது பிரமோஸ் ஏவுகணையை எல்லையில் மிக அதிக அளவில் கொண்டுசென்று நிறுத்தியது

உடனே சீனாவின் வான் அசுரன் என்று அழைக்கப்படும் J 20 ரக விமானங்களையும் J 24 ரக போர் விமானங்களையும் எல்லையில் நிறுத்தி 'தொலைத்து புடுவேன் பாத்துக்குங்க' என்று இந்தியாவுக்கு அச்சம் தரும் விதமாக செயல்பட்டது. இதற்கு சற்றும் சளைக்காத இந்தியா, ஒரு புதிய உத்தரவை வெளியிட்டது. அதாகப்பட்டது 'ராணுவத்தினரே பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தலாம். அரசின் அனுமதி தேவை இல்லை' என்று சொன்னதுதான் தாமதம் அங்கு சீனாவின் வான் அசுரர்கள் இருவரையும் காணோம்.

அட ஆமாங்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத சீனா அவசர அவசரமாக தனது J 20 போர் விமானத்தையும் J 24 ரக போர் விமானத்தையும் அப்புறப்படுத்திவிட்டு ஜப்பான் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த S 400 ஏவுகணைகள் இரண்டையும் இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தி உள்ளது, என்றால் அவ்வளவு பயம். எல்லையில் மிக அதிக எண்ணிக்கையில் பீரங்கிகளையும் ஏவு கணைகளையும் போர் விமானங்களையும் நிறுவி ராணுவத்தினரையும் அதிக அளவில் குவித்துள்ளது சீனா.

அதற்கு இந்தியா 'இந்த பூச்சாண்டி எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்' என்று இரண்டு லட்சத்து 50ஆயிரம் ராணுவத்தினரை குவித்துள்ளதோடு பாட்ஷா படத்தில் வருவது போல் 'கொஞ்சம் அங்க பார் கண்ணா' என்று தஜிகிஸ்தானில் உள்ள இரண்டு இந்திய ராணுவத் தளங்களை காட்டி உள்ளது, இந்தியா. அங்கு அனைத்து போர் விமானங்களும் பிரமோஸ் ஏவுகணை தாங்கிய மிக் 29 ரக போர் விமானங்கள், ஒரு பிரிவு சீனாவையும், மற்றொரு பிரிவு பாகிஸ்தானையும் குறி வைத்து நிற்கின்றன. இத்தனை நாள் இது சீனாவுக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கே தெரியாது.

அதனால், இதைக் கண்ட சீனா பதறித்தான் போனது. இங்க மட்டும் தான் இருக்கிறதா...? இல்லை.. இதுபோல் வேறு எங்கெல்லாம் இருக்கிறதோ என்ற அதிர்ச்சியில் திக்குமுக்காடி நிற்கின்றன சீனாவும் பாகிஸ்தானும். இதற்கு காரணம், தஜிகிஸ்தானில் உள்ள ப்பர்கார் ராணுவ தளத்தில் 3 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் பாகிஸ்தானையும் சீனாவையும் தாக்கலாம். இதற்குப் பிறகுதான் 'எங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய இந்தியா துடிக்கிறது' என்று சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் புலம்பியுள்ளார்.

சீனா கதறுவதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. இதில் இன்னும் ரஃபேல் மற்றும் சுகோய் போன்ற விமானங்களை களத்தில் இறக்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த கதறல். இதுமட்டுமின்றி ராணுவ தளவாடங்களும் வீரர்களும் விரைந்து செல்ல 63 பாலங்களை இந்தியா கட்டியுள்ளது.11 பாலம் லடாக்கில் 11 பாலம் ஜம்மு காஷ்மீரில், 3பாலம் ஹிமாச்சல் பிரதேசத்தில், 6 பாலம் உத்ரகாண்டில், 8 பாலம் சிக்கிமில், 1 நாகலாந்தில், 1மணிப்பூரில், 29 அருணாச்சல பிரதேசத்தில் கட்டி முடித்துள்ளது, பாரதநாடு. இப்போது நாம் மிக வலிமையாக தலைநிமிர்ந்து நிற்கிறோம் என்பதை உறுதியிட்டுச் சொல்வோம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Sep 2022 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்