/* */

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 1,400 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவிப்பு.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 05 மையங்களில் 1,400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 நபர்களுக்குக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், அரசர் மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் 750 மாணவிகளுக்கும் என மொத்தம் 4 மையங்களில் 1,200 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்த் மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’