/* */

தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம்

தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது

HIGHLIGHTS

தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம்
X

தஞ்சாவூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சர்க்கரைகழகத்தின் அறிஞர்அண்ணா சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது) பங்குதாரர்களின் 48 வது வருடாந்திர பேரவை கூட்டம் முதன்மை செயலாளர்/சர்க்கரைத் துறைஆணையர் சா.விஜயராஜ்குமார் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் முன்னிலையில் இன்று (28.12.2023) நடைபெற்றது.

முதன்மைசெயலாளர்/சர்க்கரைத்துறை ஆணையர் சா.விஜயராஜ்குமார் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் அறிஞர் அண்ணா சர்க்கரைஆலை (வரையறுக்கப்பட்டது) பங்குதாரர்களின் 48 -வது வருடாந்திர பேரவைகூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அறிஞர்அண்ணா சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின்2022-23 அரவைப் பருவத்தில் நமது ஆலையில் 2,46,001 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 2,19,718 குவிண்டால் சர்க்கரை மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டது. அரவை செய்யப்பட்ட கரும்பிற்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த நியாய மற்றும் ஆதார பரிந்துரை விலையான (F.R.P) டன் ஒன்றுக்கு ரூ.2,821.25 வீதம் மொத்த கரும்பு கிரய தொகையாக ரூ.69.40 கோடியை சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதுமாக பட்டுவாடா செய்யப்பட்டது. மேலும், 2022-2023 அரவை பருவத்தில் சப்ளை செய்யப்பட்ட கரும்பிற்கு மாநில அரசின் சிறப்பு ஊக்க தொகை டன் ஒன்றுக்கு ரூ.195/-வீதம் 1863 பயனாளிகளுக்கு மொத்த தொகையாக ரூ.3.39 கோடி சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2023-24 அரவைப் பருவத்தில் நமது ஆலையில் 04.12.2023 அன்று அரவை துவக்கப்பட்டு 27.12.2023 வரை 42605.831 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 24920 குவிண்டால் சர்க்கரை மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டது. அரவை செய்யப்பட்ட கரும்பிற்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த நியாய மற்றும் ஆதார பரிந்துரை விலையான (F.R.P) டன் ஒன்றுக்கு ரூ. 2,919.75 வீதம் கரும்பு கிரய தொகையாக 15.12.2023 வரை அரவை செய்த 16254 மெட்ரிக் டன்களுக்கு ரூ.4.74 கோடியை சம்பந்தப் பட்ட விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கரும்பு போக்குவரத்து மானியம்கடந்த அரவைப் பருவத்தில் மட்டும் போக்குவரத்து வாகன வாடகைத் தொகை ரூ.7.23 கோடி முழுவதையும், அரசின் உத்தரவுப்படி ஆலையே ஏற்று பட்டுவாடா செய்துள்ளது. 2023-24ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு நமது ஆலை விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளின் ஒத்துழைப்போடு 1350 ஏக்கர் நடவுக்கரும்பும், 4354 ஏக்கர் மறுதாம்பு கரும்பும், மொத்தம் 5704 ஏக்கர் பதிவு மேற்கொள்ளப்பட்டு 04.12.2023 முதல் ஆலை அரவை நடைபெற்று வருகிறது.

கரும்பு மகசூல் ஏக்கருக்கு32 டன் வீதம், சுமார் 1,83,000 மெட்ரிக் டன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் விவசாய பெருமக்களிடமிருந்து பெறப்படும் கரும்பு தொடர் அரவைசெய்யப்பட்டு ஆலை நல்ல விதத்தில் இயங்கி வருகிறது என்பதையும், காலதாமதமின்றி காத்திருக்காமல் அரவை செய்யப்படும் என்பதையும் விவசாய பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நடப்பு அரவை பருவத்தில் அரவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கரும்புக்கு கரும்பு அரவைப் பணம் 15.12.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரவை செய்யப்படும் கரும்புக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கரும்புகிரயத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரும்பு அபிவிருத்தி திட்டங்கள்2023-24 அரவைப் பருவத்தில் ஏக்கருக்கு சராசரி மகசூலை விட கூடுதலாக பெறுவதற்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் இதுநாள் வரையில் 1267 விவசாயிகளுக்கு 1868.32ha பரப்பில் ரூ.1485.91 லட்சங்கள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அகலப் பார் அமைத்து கரும்பு நாற்றுகள் மூலம் நடவு செய்யும் செயல் விளக்கங்கள், கிராமக் கூட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு கரும்பு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

(NADP) தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்2023-24 தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள கரும்பு விவசாயிகளுக்கு வல்லுநர் விதைக் கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுக்கள், புதிய இரக விதைக் கரும்புகள் கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க கழகம் மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்த விவசாயிகளுக்கும், பருசீவல் நாற்று மற்றும் ஒருபரு கரணை அகலப்பார் முறையில் நடவு செய்த 19 விவசாயிகளுக்கு 27.30ha. பரப்பிற்கான ரூ.3.64 லட்சம் நடப்பாண்டில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு வெட்டாட்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் நலன் கருதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் இந்த அரவை பருவத்திற்கு ரூ.1,37,500.24/- க்கு குழுக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் பணியில் நவீன மயமாக்கல் முறையில் 6 கரும்பு வெட்டு இயந்திரங்கள் ஆலையின் பரிந்துரையில் மானிய விலையிலும் நடப்பு 2023-24 நிதியாண்டில் புதியதாக ஒரு அறுவடை இயந்திரம் அரசு மானியத்துடன் கொள்முதல் செய்யப்பட்டு கரும்பு வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23 அரவைப்பருவத்தில் இயந்திர அறுவடை மூலம் மொத்தம் 52000 டன்கள் (26%) அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரவைக்கு கரும்பினை அனுப்பிவைத்து ஆலையின் நடப்பு அரவைக்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கும் அனைத்து கரும்பு விவசாய பெருமக்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதன்மை செயலாளர்/சர்க்கரைத்துறை ஆணையர் சா.விஜயராஜ்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் பிரதிநிதி கே.சித்ரா, தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேல், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாக மற்றும் இயக்குநர் ஏ.ரவிச்சந்திரன், பங்குதார்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 28 Dec 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா