/* */

தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆய்வு

மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்டபணிகள் முன்னேற்றம் பேரிடர் முன்னேற்பாடுபணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தலைமையில்  நடைபெற்ற ஆய்வு கூட்டம் 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்து அரசுதுறை வளர்ச்சி திட்டபணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் (22.12.2022) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்டபணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடுபணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர்,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடுகள் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், பள்ளிஉட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும்.

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் இக்கூட்டத்தில ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தெரிவித்தார்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்டகண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் டி.ஆனந்த் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்டபணிகள் வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ். ஸ்ரீகாந்த் , மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்