/* */

தஞ்சாவூர் பெரிய கோயில் நவராத்திரி விழாவில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பெரியநாயகி

தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று பெரியநாயகி அம்மன், மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் பெரிய கோயில் நவராத்திரி விழாவில்  மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பெரியநாயகி
X

தஞ்சை பெரியகோயில் நவராத்திரி விழாவில் பெரியநாயகியம்மன், மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனொஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இத்தகைய புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.

நேற்று ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் இரண்டாம் நாளான இன்று மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 7 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்