/* */

தஞ்சை: 30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு தஞ்சையில் 30 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

HIGHLIGHTS

தஞ்சை:  30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்
X

கோயில் அன்னதான திட்டம்(பைல்படம்)

இரண்டு வருடங்களுக்கு பிறகு தஞ்சையில் 30 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஆலயங்களில் பக்தர்களுக்கு அர்ச்சனை, பிரசாதம் வழங்க முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதேபோல் கோயில்களில் மதியம் வேலை வழங்கப்படும் அன்னதான திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது. தஞ்சையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 கோயில்களிலும், அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான நான்கு கோயில்களிலும் அன்னதானம் போடும் பணி தொடங்கியது.

இதில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான புன்னைநல்லூர் மாரியம்மன், கோடியம்மன், கொங்கணேஸ்வரர், உள்ளிட்ட ஆலயங்களில் 400 பேருக்கு அன்னதானம் போடும் திட்டம் தொடங்கியது. முன்னதாக அன்னதான கூடத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பணியில் இருக்கும் ஊழியர்கள், கை கால்களை முறையாக சுத்தம் செய்து, முகக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தனர்.

Updated On: 20 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  2. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  3. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  6. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  7. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  8. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  9. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  10. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!