/* */

கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயி கள் கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் கேஒய்சி விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

HIGHLIGHTS

கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயி கள் கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்(பைல் படம்)

திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் கேஒய்சி விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நலிவடைந்த காரணத்தால் 2018-19 ஆம் ஆண்டு முதல் அரவை நடைபெறவில்லை. இதனால் அந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புத்தொகை நிலுவையில் இருந்தது. விவசாயிகள் சார்பில் கோரப்பட்ட நிலுவைத் தொகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT)–யில் 2.5.2022 அன்றைய தீர்ப்பின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகையாக விவசாயிகளுக்கு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 29.96 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத்தல் அலுவலர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கேஒய்சி விபரம் பெறப்படாத காரணத்தால் 2.97 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத்தல் அலுவலர் வசம் உள்ளது. தற்போது, கலைத்தல் அலுவலர் அவர்களால் 29.11.2023 அன்று தமிழ் நாளேடு தினத்தந்தியிலும், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிலும் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ekyc மூலம் விண்ணப்பிக்காத விவசாயிகள் https://www.tasugars.in//investorinfo.html என்கிற வலைதளத்தில் தமிழ் அல்லது ஆங்கில விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உடன் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில், திவால் மற்றும் திவால் சட்டம் 2016 (Insolvency and Bankruptcy Code 2016) சட்டத்தின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ளபடி மீதம் உள்ள செலுத்தப்படாத தொகை கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைத்தல் அலுவலர் முகவரி ராமகிருஷ்ணன் சதாசிவன், IP Reg No: IBBI/IPA-001/IP-P00108/2017-18/10215 கண்காணிப்புக் குழுவின் தலைவர், திரு ஆரூரான் சுகர்ஸ் லிமிடெட்,

முகவரி : பழைய எண்: 22, புதிய எண் 28, மேனாட் தெரு, புரசைவாக்கம், சென்னை – 600 007, கைபேசி எண் 94444 55982. மின்னஞ்சல் முகவரி: thiruarooransugars ltd @gmail.com/ sadasivanr@gmail.com

எனவே (NCLT) தீர்ப்பின்படி 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகை பெறாத விவசாயிகள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கேஒய்சி விவரங்களை 31.12.2023 -க்குள் கலைத்தல் அலுவலரிடம் சமர்ப்பித்து உரிய தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்

Updated On: 28 Dec 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்