/* */

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்: 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்: 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

தஞ்சையில் கடந்த 2 நாட்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு, மக்கள் விரோத போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், பாஜக இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகும், பாஜக இங்கு வெற்றி பெறவில்லை, ஜனநாயக சக்திகளின் பலவீனத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளது என SDBI கட்சியின் மாநில தலைவர் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், விகிதாச்சார முறையில் தேர்தல் கொண்டுவர வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும், மின்னணு வாக்கு இயந்திர முறை இரத்து செய்ய வேண்டும், சிறைவாசிகள் விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது, யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், NIAவை கலைக்க வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், இது போன்ற அரசு இந்தியாவில் அமைந்ததில்லை. குறிப்பாக விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி இன்றி வாழ்ந்து வருவதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒன்றிய அரசை அகற்றப்பட வேண்டும், அந்த நாளை தான் ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்பார்த்திருப்பதாகவும்,ஒன்றிய அரசு மக்கள் விரோத போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், பாஜக இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஜனநாயக சக்திகளின் வீழ்ச்சிதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம். எனவே பாஜக இங்கு வந்து வெற்றி பெறவில்லை, ஜனநாய சக்திகளின் பலவீனத்தை பயன்படுத்தி கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Updated On: 24 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!