/* */

விஜயவாடா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்க முடிவு

அக்டோபர் -14 விஜயவாடாவில் நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்க முடிவு

HIGHLIGHTS

விஜயவாடா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்க முடிவு
X

 தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார், மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

அக்டோபர் -14 விஜயவாடாவில் நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தி.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளராக கோ. சக்திவேல், மாவட்ட பொருளாளராக ந.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சி.சந்திரகுமார் உள்ளிட்ட 16 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று, அகில இந்திய மாநாடு நோக்கம் குறித்து பேசியதாவது:.வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விஜயவாடாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான அக்டோபர் 14ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணி, மாநாடு நடைபெறுகிறது .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் விஜயவாடா நகரில் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் மிகுந்த அரசியல் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

பா.ஜ.க அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியக் தளத்திலும், சமுக தளத்திலும் பின்பற்றுகிறது. பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை வளர்வதாக உலக கருத்து கணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை இருப்பதாகவும், இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவம் ஒப்புகொள்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மையம் ஆக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சாதகாமக மோடி அரசாங்கம் செயல்படுகிறது.

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர மோடி அரசாங்கம் தயாராக இல்லை என்றும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிறகு அதற்காக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர் எல்.ஐ.சி, விமான நிலையம், வங்கி ஆகிய அனைத்துமே தனியார் மையம் ஆகி வருகின்றன. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, சுதந்திரத்திற்கு துளியும் பங்கு இல்லாத பா.ஜ.க சுதந்திரமே தங்களால் தான் கிடைத்தது போல செய்து கொள்கிறார்கள் என்றவர், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அனைத்து ஜனநாயக் சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்றார் முத்தரசன்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: விஜயவாடாவில் நடைபெறும் பேரணி மாநாட்டில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 500 பேர் கலந்து கொள்வது என்றும்,தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையுடனும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தை தஞ்சாவூருடனும் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பள்ளி கல்வி துறை அமைச்சரும் நான்கு மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், இணைக்கும் முடிவு கிடையாது என்று அறிவித்த பின்னரும் தற்போது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்கள் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் கைவிட கேட்டுக் கொள்கிறது.

தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யப்படாமல் பல நாட்களாக திறந்தவெளியில் வீணாகி வருகிறது. 17 சதவீத ஈரப்பதம் குறித்த கொள்முதலில் 20% வரை ஈரப்பதம் வைத்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 6 Oct 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது