/* */

தஞ்சையில் தேசிய கைத்தறி தின விழா: ஆட்சியர் தொடக்கம்

தஞ்சை மண்டலத்தில் இந்த ஆண்டு விற்பனைக் குறியீடாக ரூ.20. கோடிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சையில் தேசிய கைத்தறி தின விழா: ஆட்சியர் தொடக்கம்
X

தஞ்சையில் தேசிய கைத்தறி தின விழாவைத் தொடக்கி வைத்த ஆட்சியர்  தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் “ஒன்பதாவது தேசியகைத்தறி தினவிழா ”மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமானகோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ளகோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய யுத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு தஞ்சாவூர் மண்டல விற்பனை நிலையங்களில் ரூ.10. கோடிகள் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு விற்பனைக் குறியீடாக ரூ.20. கோடிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்' என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாதசந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டுவருகிறது.

புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள்,கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள்,லினன் புடவைகள்,போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள்,வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகஉள்ளன.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் "ஒன்பதாவது தேசிய கைத்தறி தினவிழா' கொண்டாட்டம் மற்றும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை (07.08.2023) முதல் (20.08.2023) வரை நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இவ்விழாவில் கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி,மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் முதல்வர் முனைவர் ரோசி, குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர், மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) சி.அய்யப்பன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்