/* */

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திருக்குறள் ஒப்பாய்வுரை நூல் அறிமுகம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்நூல் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திருக்குறள் ஒப்பாய்வுரை நூல் அறிமுகம்
X

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்  நூல் அறிமுக ம் செய்து வைத்தார். 

திருக்குறள் சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ) ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தஞ்சாவூர் முள்ளி வாய்க்கால் முற்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் எழுதிய திருக்குறள் ஒப்பாய்வுரை என்னும் நூல் அறிமுக கூட்டம் தஞ்சாவூர் விளார் சாலை முள்ளி வாய்க்கால் முற்றத்தில் முனைவர் முத்தமிழ் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் செயலாளர் பேராசிரியர் வி.பாரி அனைவரையும் வரவேற்று பேசினார். நூலை பற்றி பேராசிரியர் த.ஜெயராமன், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், பாவலர் த.ரெ. தமிழ்மணி, த.மன்னர்மன்னன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நூல் அறிமுக கூட்டத்தின் வாழ்த்துரையாக மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், பேராசிரியர் மு. இளமுருகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழர் உரிமை இயக்க தலைவர் சுப்புமகேஷ், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி. குணசேகரன், தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி சீனி விடுதலையரசு, திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட நிர்வாகி சாக்கோட்டை இளங்கோவன், மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அ.லூர்துசாமி, தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க தலைவர் தங்க குமரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நூல் அறிமுக கூட்டத்தை நிறைவு செய்து சிறப்புரை யாற்றினார். நூலாசிரியர் பொழிலன் ஏற்புரை வழங்கினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு.பழனி ராஜன் நூல் அறிமுக கூட்டத்தினை தொகுத்து வழங்கினார் . கூட்டத்தின் முடிவில் தென்மொழி குழந்தை ஈகவரசன் நன்றி கூறினார் .

திருக்குறள் நூலில் 133 அதிகாரங்களில் 1330 பாடல்கள் உள்ளன. திருக்குறள் ஒப்பாய்வுரையில் அறத்துப்பால் எனும் தலைப்பில் 38 அதிகாரங்களில் 380 பாடல்களுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் கருத்துகளுடன், தற்போதைய சமூக, அரசியல் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

இயங்கியல் அடிப்படையில் திருக்குறள் ஒப்பாய்வுரை நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது, நமது தாய் மொழி தமிழின் தொன்மை,பண்பாடு, கலாச்சாரங்களை புரிந்து கொள்வதுடன், பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்த ஆய்வுரை நூலை இன்றைய தலைமுறையினர் படித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் என்று நூல் அறிமுக கூட்டத்தில் கருத்துகள் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 5 Nov 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்