/* */

பம்பு செட் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்: ஆட்சியர் தகவல்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

HIGHLIGHTS

பம்பு செட் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்  அமைக்க மானியம்:  ஆட்சியர் தகவல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர்(பைல் படம்) தினேஷ்பொன்ராஜ்ஆலிவர்

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடவும் நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்; நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியில் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்றபின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர்(வே.பொ) அவர்களால் முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) மையத்தினை நேரில் அய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்தவர்கள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்- 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்தவர்கள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் - 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்தவர்கள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...