/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர் களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 கோடியை 79 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர் களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்
X

தஞ்சாவூர் மாவட்டம் அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன்  மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 கோடியை 79 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் முன்னிலை வழங்கினார்.

பின்னர்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் 25.07.2022 தேதியன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு,அரசுஉதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாகஅரசுநிதிஉதவிபெறும் பள்ளிகளில்11-ஆம் வகுப்புபயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைதொடங்கிவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல்நிலைக் கல்விப்பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ,மாணவியருக்குக்கும், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 23208 மாணவர்களுக்கு 11 கோடியே 79 இலட்சத்து 14 ஆயிரத்து நூற்று எண்பத்து நான்கு மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கூடுதல் ஆட்சியர் (வருவாய்),என்.ஓ.சுகபுத்தரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்டஊராட்சிதலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் .அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மு. சிவகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் .ரேணுகாதேவி மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Updated On: 23 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...