/* */

வட்டார வள நபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

அனைத்து ஊராட்சி ஒன்றியங்க ளிலும் காலியாக உள்ள 14 வட்டார வள நபர் (IB&CB, FI மற்றும் P&C) பணியிடங்களுக்கு விண்ணப்பிக் கலாம்

HIGHLIGHTS

வட்டார வள நபர் பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 வட்டார வள நபர் (IB&CB, FI மற்றும் P&C) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார வள நபர் (IB&CB, FI மற்றும் P&C) தகுதிகள் விவரம்: வயது 31.07.2023 தேதிய நிலையில் 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி குறைந்தது ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பு.முன் அனுபவம் மகளிர் சுய உதவிக்குழு. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், பயிற்சியாளர்கள், சமூகப் பணியாளர்கள், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள நபர்கள் மற்றும் பிற அரசுத்துறை பயிற்சியாளர் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருத்தல் வேண்டும்.

முன்னாள் வட்டார வள நபர்களுக்கு ஒன்றாவது முன்னுரிமையில் வழங்கப்படும். மற்ற பிற தகுதிகளுக்கான காரணிகளில் மாற்றம் இல்லை. கணினி MS-Omicc, Android Mobile Application நன்கு அறிந்திருத்தல் வேண்டும், மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்- 28.08.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223 - இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613 010.

மேற்குறிப்பிட்டுள்ள ஒப்பந்த அடிப்படையிலான வட்டார வள நபர் (IB&CH, FI மற்றும் P&C) காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு 50 மதிப்பெண்க ளுக்கும் மற்றும் நேர்முக தேர்வு 50 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும். உரிய காலத் திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Aug 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்