/* */

உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி காவிரி நீரைப் பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது

HIGHLIGHTS

உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி காவிரி நீரைப் பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை
X

தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து சட்டப்படியான நீரைப் பெற்று நடப்பு சம்பா சாகுபடிக்கு திறந்து விட வேண்டும்.

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளர் மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி, தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் மாதவன்,அயிலை. சிவசூரியன், தஞ்சை மாவட்ட தலைவர் ஆர்.இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடப்பு சம்பா சாகுபடி சரிவர மழை பெய்யாதாலும், அவ்வப்போது மழை பெய்தும் தாமதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் வரை சம்பா சாகுபடி வேலைகள் நடைபெறும் சூழல் உள்ளது.சம்பா பயிருக்கு தேவையான நீர் மேட்டூர் அணையில் இருப்பு இல்லாத நிலையில்,உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு மாதா, மாதம் வழங்க வேண்டிய சட்டப்படியான நீரை பெற்று, சாம்பா சாகுபடி பணிகளுக்கு வழங்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு பால்விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது, இருப்பினும் தற்போது உள்ள விலைவாசி உயர்வை கணக்கிட்டு பால் விலை லிட்டருக்கு பத்து ரூபாயாக உயர்த்த வேண்டும்,பால் உற்பத்திக்கு கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் விலை நாளுக்கு நாள் ஏறி வரும் நிலையில், ஆவின் உறுப்பினர்களுக்கு கால்நடை தீவனத்தை 50%சத மானிய அடிப்படையில் வழங்க வேண்டும்,தற்போது வடகிழக்கு பருவமழை, தட்பவெட்ப நிலைகள் கால்நடைகளை மிகவும் பாதித்துள்ளது இறப்புகளும் அதிகரித்து வருவது விவசாயிகளுக்கு மிகப்பெரும் இழப்பாக உள்ளது.

இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி,இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் அறிவித்து செயல்படும் தமிழ்நாடு அரசு தொழு கூடம் நாடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிவித்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டுகிறோம், ஐநா சபை 2023 ஆம் ஆண்டை சிறுதானிய சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

தற்போது சிறுதானிய ஆண்டு முடிவடையும் நிலையில் இந்த திட்டங்களை மேம்படுத்தவும், சிறுதானிய சாகுபடிக்கு விதைகள், இடுபொருட்கள், வணிகப்படுத்துதல் போன்ற தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும், சிறுதானிய உற்பத்திக்கு தனித்துறையை ஏற்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்பதுஸ உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது .

Updated On: 15 Dec 2023 4:42 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி