/* */

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.966 கோடி மதிப்பீட்டில் 103 திட்டப்பணிகள்

தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுதல், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், சூரிய மின்கலம் அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது

HIGHLIGHTS

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.966 கோடி மதிப்பீட்டில் 103 திட்டப்பணிகள்
X

 தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அலுவலர்களுடன் நடந்த  ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் ரூ.966.62கோடிமதிப்பீட்டில் 103 திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டுவருகிறது என்று தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் மேற்க்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் விநியோகம், போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு பொழுது போக்கு பூங்கா,அறிவியல் பூங்கா அமைத்தல் குறித்தும்.

தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுதல், அங்கன்வாடி மையத்தை மேம்படுத்துதல், சூரிய மின்கலம் அமைத்தல் குறித்தும் குளங்களை பாதுகாத்தல் குறித்தும் திறன் மேம்பாட்டு மையம் குறித்தும், பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு குறித்தும் ,திடக்கழிவு மேலாண்மை குறித்தும், தரமான தார் சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 966.62 கோடி மதிப்பீட்டில் 103 பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் , மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி உதவிபொறியாளர்கள் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்