/* */

கல்லணை கால்வாய் புனரமைப்புப்பணிகள்: பொதுப்பணித் துறை வல்லுனர் குழு ஆய்வு

இந்த குழு திருச்சி மண்டலத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்

HIGHLIGHTS

கல்லணை கால்வாய் புனரமைப்புப்பணிகள்:   பொதுப்பணித் துறை வல்லுனர் குழு ஆய்வு
X

கல்லணை கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளின் தரம் குறித்து பொதுப்பணித் துறை வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டனர் .

கல்லணை கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளின் தரம் குறித்து பொதுப்பணித் துறை வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டனர் .

சென்னை, புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிடம் தரமற்ற நிலையில் உள்ளதை அடுத்து, அங்கு பல்வேறு குழுவினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறையின் கீழ், அரசால் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் ஆதித்யா தலைமையிலான 4 பொறியாளர்கள் கொண்ட குழுவினை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த குழு, கடந்த ஒரு வார காலமாக திருச்சி மண்டலத்தில் உள்ள, பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், தஞ்சை கல்லணை கால்வாயில் 2500 கோடி ரூபாய் செலவில் நபார்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீரமைப்பு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

தஞ்சையிலிருந்து வெட்டிக்காடு வரை ஆற்றின் தரம் மற்றும் கரையை பலப்படுத்தக்கூடிய பணியினை, சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பிஎஸ்பி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த ஆய்வு நடைபெற்றது. கட்டுமானப் பணி என்பது தரமான முறையில் இருக்க வேண்டும் எனவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்


Updated On: 3 Sep 2021 3:45 PM GMT

Related News