/* */

அத்திவெட்டி பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு: வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

Fish Farming Ponds- அத்திவெட்டி பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

அத்திவெட்டி பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு: வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
X

அத்திவெட்டி பஞ்சாயத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்க்க விருப்பம் தெரிவித்திருந்த 15 விவசாயிகளின் கள விபரங்களை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Fish Farming Ponds- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அத்திவெட்டி பஞ்சாயத்தில் சொந்த செலவிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமும், வேளாண் பொறியியல் துறை மூலமும் பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளில் மீன் வளர்ப்பு செய்திட விருப்பம் தெரிவித்த 15 விவசாயிகளின் விபரங்கள் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கள விபரம் ஆய்வு செய்யப்பட்டது.

அத்திவெட்டி கிழக்கு, அத்திவெட்டி மேற்கு அத்தி வெட்டி மறவக்காடு ஆகிய கிராமங்களில் பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகளுக்கு தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு திட்டத்தில் 50 சத மானியத்தில் மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனம் ஆனது வழங்கப்பட உள்ளது.

இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனரின் அறிவுரைப்படி, பண்ணை குட்டை யார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பண்ணை குட்டையில் உள்ள நீரின் அளவு விவசாயிகளின் விருப்ப நிலை போன்றவை வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோரால் தனித்தனியாக கள ஆய்வு செய்யப்பட்டது.

விருப்பம் தெரிவித்திருந்த விவசாயிகளில் ஒரே குடும்பத்தில் பண்ணை குட்டை அமைத்த விவசாயிகள் மற்றும் பண்ணை குட்டைகளில் நீர் இல்லாதவர்கள் நீங்களாக பிற விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட மீன்வள உதவி இயக்குனருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட உள்ளது.

மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் கள ஆய்வுக்கு பின் கலைஞர் திட்ட விவசாயிகளுக்கு 250 முதல் ஆயிரம் சதுர மீட்டர் பல்நோக்கு பண்ணை குட்டைகளுக்கு மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க மீன் குஞ்சுகள், மீன் தீவனம் மற்றும் பறவை தடுப்பு வசதிகளிற்கான மொத்த செலவீனம் ரூ.36000த்தில் ரூ.18000 ஐம்பது சதம் மானியமாக அனுமதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் தென்னந்தோப்புகள் மற்றும் நெல் வயல்களில் நீர் சேமிப்புக்காக மட்டும் உருவாக்கப்பட்ட பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என்பது திண்ணம் என வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி தெரிவித்தார்.

துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விவசாயிகளின் அடிப்படை விபரங்களை பதிவு செய்து கொண்டார். அத்திவெட்டி பஞ்சாயத்தை சேர்ந்த குமாரவேல் மாரியம்மாள் வடிவேல் மூர்த்தி புஷ்பவல்லி ராதாகிருஷ்ணன் ராதா பாலசுப்ரமணியன் பழனி ராஜா கஸ்தூரி சிவசங்கர் வைரவ மூர்த்தி மற்றும் போஸ் ஆகிய விவசாயிகளின் பண்ணை குட்டைகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் படிவங்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் எவரும் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரிடம் விவரம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  2. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  3. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  5. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  6. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  7. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  9. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  10. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்