/* */

தென்காசியில் பாரம்பர்ய கலைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் நடைபெறுவதையொட்டி பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்கள் நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசியில் பாரம்பர்ய கலைகள் மூலம்   தேர்தல் விழிப்புணர்வு
X

தேர்தல் நடைபெறுவதையொட்டி பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்கள் நடத்தினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சமீரன் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பெண்கள் கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டனர். இப்பேரணியானது தென்காசி ரயில் நிலையம் முன்பு தொடங்கி முக்கிய நகர்ப்புறம் வழியாக வந்து காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு நிறைவடைந்தது.

Updated On: 9 March 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...