/* */

குற்றாலத்தில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக வினர் கைது

குற்றாலத்தில் தமுமுக ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

குற்றாலத்தில்  காவல்துறையை கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக வினர் கைது
X

குற்றாலத்தில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்மாநிலத் தலைவர் சையத் அலி தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது.இதனைத் தொடர்ந்து மாநில துணைத் தலைவர் கோவை செய்யது தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை அருகே காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாநிலத் துணைத் தலைவர் கோவை செய்யது செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று குற்றாலத்தில் தமுமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கொரோனா 3-ஆவது அலையை எப்படி எதிர்கொள்வது, மருத்துவ சேவை, அணியை எப்படி பலப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த தீர்மானித்திருந்தோம். இந்நிலையில், திடீரென நேற்று மதியம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதனை ஏற்க முடியாது.

தமுமுக - 2015-இல் பதிவு செய்யப்பட்டுளளது.எங்களை தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என சட்டம் சொல்கிறது. அனுமதி மறுக்கப்படுவது நோக்கம் என்ன. அதைத் தெரிந்து கொள்ளத்தான் இன்று ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாநில செயலாளர் நைனார் முகமது, மாவட்ட செயலாளர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 25 July 2021 11:14 AM GMT

Related News