/* */

தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்

தென்காசியில் சூறாவளியுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்
X

அடியோடு சாய்ந்து சேதமடைந்த வாழை மரங்கள்

தென்காசி மாவட்டத்தில் சூறாவளியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அதேபோல் தென்காசி அருகே உள்ள நன்னகரம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து உள்ளது. இங்கு கற்பகவள்ளி, வெள்ளை சிங்கம், சக்கை வாழை உள்ளிட்ட வாழைகளை பயிர் செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்த வாழைத்தார்களை அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தமிழக அரசு இந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#instanews #tamilnadu #Tenkasi #cyclone #Damage #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தென்காசி #அறுவடைக்கு #banana #trees #readyfor #வாழைமரங்கள் #வாழைமரங்கள்சேதம் #harvest #சூறாவளி #damage #farmers #loss #duetorain #heavycyclone

Updated On: 17 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா