/* */

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தென்காசி

தென்காசியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன.

HIGHLIGHTS

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தென்காசி
X

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தென்காசி பிரதான சாலை.

தென்காசி மாவட்டம் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இந்த மாவட்டத்தின் தலைநகராக தென்காசி உள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு இருந்தாலும் சில இடங்களில் பணிகளை சரிவர செய்ய முடிவதில்லை. இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அன்றாட தேவைக்காக தென்காசி நோக்கி கிராமவாசிகள் தினமும் பயணிக்கின்றனர்.

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தென்காசி இருந்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்காசி வாய்க்காலத்தில் இருந்து பெருமாள் கோவில் வரை சாலைகளின் இரு பக்கங்களிலும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

போதிய வாகன நிறுத்த வசதிகள் இல்லாததால் சாலையின் இரு பக்கவாட்டுகளிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இது போக சுவாமி சன்னதி பஜார், கூலக்கடை பஜார், வேன் ஸ்டாண்டு, போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை தனியாக பார்க்கிங் செய்வதற்கென்றே சாலை ஓரமாக கயிறுகளை கட்டி கடந்த சில வருடத்திற்கு முன் அப்போதைய காவல்துறை ஆய்வாளர் வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குப்படுத்தி தொடர் கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதை மீண்டும் புத்துயிர் பெற தற்போதைய நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும் என வணிகர்கள் விரும்புகின்றனர். தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுப்ரபாதம் வழியாக ஒரு வழிப்பாதை அமலில் உள்ளது. ஆனால் அங்கு பாதையை பார்க்க முடியாதவாறு சென்னையில் ரங்கநாதன் பஜார் போல் அப்பகுதி செயல்படுகிறது.

அதேபோல் கூலக்கடை பஜார் பகுதியும் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் அதை கடைபிடிக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமாகியுள்ளது.

ஆகவே தீபாவளி நெருங்குவதால் கூடுதலாக இப் பகுதியில் காவலர்களை பணியமத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபோக வட மாநில வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றனர் சில பகுதிகளில் ஒரிசா பதிவின் கொண்ட வட மாநிலத்தவர்களின் கார்களும் இரு சக்கர வாகனங்களும் பார்க்க முடிகிறது. சந்தேகிக்கும் உரிய வகையில் சிலர் சுற்றுகின்றனர் ஆகவே மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே நகராட்சி மன்றத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சியில் முக்கியமான சில இடங்களில் வாகனறுத்தம் உருவாக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Oct 2022 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...