/* */

தென்காசியில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கிய பூங்கா சீரமைப்பு

தென்காசியில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கிய பூங்காவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீரமைத்துள்ளார்.

HIGHLIGHTS

தென்காசியில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கிய பூங்கா சீரமைப்பு
X

தென்காசியில் போலீசாரால் சீரமைக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் உள்ள பூங்கா கடந்த சில வருடங்களாக பராமரிப்பின்றியும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. இதனால் பல குற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தென்காசி பகுதிகளில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தனது சொந்த முயற்சியில் அந்த பூங்காவை சீரமைக்கும் பணியினை அப்பகுதியில் உள்ள இளைஞர்களைக் கொண்டு சீரமைத்துள்ளார். மேலும் இந்த பூங்கா வளாக சுற்றுச்சுவர்களில் அம்பேத்கார், பாரதியின் உருவப்படங்கள், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் போன்றவை எழுதபட்டு புது பொழிவுடன் காட்சியளிக்கிறது. புது பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியின் போது காவல் ஆய்வாளர் பாலமுருகன் அந்த பகுதி ஊர் பெரியவரை அழைத்து திறக்க வைத்தார். விழாவில் பேசிய ஆய்வாளர் பாலமுருகன் இன்றைய இளைஞர்கள் மது போன்ற போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் படிப்பு ஒன்றே திருட முடியாத சொத்து. அதனால் இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சமூகத்தில் முன்னேற வேண்டும் என்றார்.

மேலும் இந்த பூங்காவில் உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதனை இப்பகுதி மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்விழாவில் மருத்துவர் சங்கர குமார், நகர்மன்ற உறுப்பினர் முருகன், காவல் உதவி ஆய்வாளர் கற்பகராஜ், பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2022 5:36 AM GMT

Related News