/* */

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
X

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக 632 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடந்தது.

6 நகராட்சிகளில் 68.63 சதவிகித வாக்குகளும், பேரூராட்சிகளில் 73.14 சதவிகித வாக்குகள் என மொத்தம் 70.40% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த பதிவான மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாளை 22-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

தென்காசி மாவட்டத்தில் மொத்த உள்ள வாக்காளர்கள் - 5,00,973 பேரில்3,52,671 பேர் வாக்களித்துள்ளனர். 22ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகராட்சிக்கான வாக்குகள் விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் வைத்தும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவ நல்லூர் பேரூராட்சிகளின் வாக்குகள் புளியஙகுடி வீராசாமி செட்டியார் பொறியியல்.கல்லூரியில் வைத்தும்,சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி ஆகிய வாக்குகள் சங்கரன்கோவில் கோமதி அம்பாள்மெட்ரிக் பள்ளியில் வைத்தும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர்,குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி, செ.புதூர், வடகரை கீழ்பிடாகை ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் எண்ணிக்கை செங்கோட்டை எஸ். ஆர். எம். அரசு மகளிர் பள்ளியில் வைத்தும்,

தென்காசி நகராட்சி,சுரண்டை நகராட்சி, ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பேரூராட்சி ஆகிய வாக்குகள் தென்காசி ICI ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்தும்,ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி,கீழப்பாவூர் ,சுந்தரபாண்டிய புரம் ஆகிய பேரூராட்சி வாக்குகள் ஆலங்குளம் சர்தார்ராஜா கல்லூரியில் வைத்தும் எண்ணப்படுகிறது.

இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பேரிகாட் தடுப்பு அமைக்கும் பணியும், டேபிள்கள் அமைத்து, ஒவ்வொரு டேபிளுக்கும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்தது.

வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்கு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், தீயணைப்புத் துறை வாகனமும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 17 பேருராட்சிகளின் வாக்கு என்னும் பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 21 Feb 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!