/* */

தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர்நல கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு

Student Hostel -தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர்நல கல்லூரி மாணவியர் விடுதியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர்நல கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு
X

முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து மாணவியர் விடுதியில்  தென்காசி மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றினார்.

Student Hostel -தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலத்தில் இருந்த படியே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சோலைச்சேரியில் ஆதி திராவிடர்நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சோலைசேரியில் ரூ. 1 கோடியே இருபத்து ஆறு இலட்சத்து ஒன்பதாயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில், தாட்கோ அலுவலகத்தினையும் காணொலி காட்சி வாயிலாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்ததாவது:-

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சோலைச்சேரியில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 584.58 சதுர மீட்டர் (தரைத்தளம் - 301.87 சதுர மீட்டர் முதல் தளம் 282.71 சதுர மீட்டர்) பரப்பளவில் ரூ.126.09 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் ஏழு அறைகளுடன் சுமார் 75 மாணவியர்கள் சுகாதாரத்துடன் வசதியாக தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு உரிய மேசை இருக்கைகளுடன் கூடிய உணவுக் கூடமும், சமையல் தயாரிக்க சுகாதாரமான வகையில் சமையலறையும், நவீன வசதியுடன் குளியலறைகள் மற்றும் கழிப்பறைக் கூடமும், சூரிய ஒளி மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுதியினை சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் வசதி மற்றும் உயர்ந்த வண்ணப்பூச்சுடன் மாணவியர் பயன்பெறும் வகையில் தேவையான வசதிகளுடன் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் (பொ) பால்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மதிமாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாவதி (பந்தப்புளி), வீராச்சாமி (காரிசாத்தான்), சங்கரன்கோவில் தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) திருமதி.பரிமளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் தென்காசி மாவட்ட மாவட்ட தாட்கோ அலுவலகமும் தமிழக முதல்வர் ஸ்டாலினால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளர் மற்றும் தென்காசி நகர மன்ற தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Nov 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...