/* */

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்சை வழியில் போராட்டம்

சோனியா-ராகுல் ஆகியோரை கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறையைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்சை வழியில் போராட்டம்
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக போராட்டம்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை நேற்று விசாரணைக்கு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான பழனி நாடார் தலைமை வகித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் சொத்து நேஷனல் ஹெரால்டு ஆகும். இதனை காங்கிரஸ் கட்சி எடுத்ததாக கூறி சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இருக்கும் பாஜக அரசு பழிவாங்கும் நோக்கில் விசாரணை எதுவும் செய்யாமல் சும்மா சம்மன் மட்டும் அனுப்பி உள்ளது இதனை கண்டித்து இன்று போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்தப் போராட்டத்தில் சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி வட்டாரத் தலைவர் பெருமாள், தென்காசி நகரத் தலைவர் காதர் மைதீன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்